ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைவு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,500 ரூபாய்க்கும், சவரன், 1,08,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 270 ரூபாய் குறைந்து, 13,230 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,160 ரூபாய் சரிவடைந்து, 1,05,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 240 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.40 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement