மருத்துவ படிப்பில் சேர 70,488 பேர் விண்ணப்பம்

சென்னை: 'தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு, 70,488 பேர் விண்ணப் பித்த நிலையில், தேசிய தேர்வு முகமை யால், மாணவர் சேர்க்கை தாமதமாகலாம்' என, தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர் சேர்க்கை குழு தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 13,999 எம்.பி. பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நடத்துகிறது.

அதன்படி, 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பே விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்று முன் தினம் முடிவடைந்தது.

அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 40,761 பேர், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான சேர்க்கைக்கு, 29,727 பேர் என, மொத்தம் 70,488 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர் போராட்டம் இதற்கிடையே, தேசிய தேர்வு முகமை, இதுவரை 'நீட்' தேர்வு எழுதியவர்களின் விபரங்களை, மாநில அரசுகளுக்கு வழங்கவில்லை. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான பட்டியலையும், மத்திய அரசு வழங்கவில்லை.

இதற்கு டில்லியில் நடக்கும் மாணவர் போராட்டம் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இவற்றால், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவது தாமதமாகலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement