பி.இ., - பி.டெக்., கலந்தாய்வு: 35,214 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு
சென்னை: இன்ஜி., படிப்புக்கான கலந்தாய்வில், 35,214 மாணவ - மாணவியருக்கு, தற்காலிக ஒதுக்கீடு ஆணை வெ ளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், இன்ஜி., கல்லுாரிகளுக்கான நடப்பு கல்வியாண்டு கலந்தாய்வு, கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது.
அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாற்றுத் திறன், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவில், 137 மாணவ - மாணவியருக்கு, பி.இ., - பி.டெக்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன்பின், பொதுப்பிரிவில் சிறப்பு பிரிவு மாணவ - மாணவியர் 813 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தொடர்ந்து, பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு, கடந்த 20ம் தேதி தொடங்கியது. இதில், பொதுப்பிரிவில், தரவரிசையில் முதல் 37,976 இடங்களை பிடித்த மாணவர் களுக்கும், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தர வரிசையில், முதல் 2,570 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் அழை ப்பு வி டுக்கப்பட்டது.
பொதுப்பிரிவில், 32,250 மாணவர்கள், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வில், 2,434 மாணவர்கள் பங்கேற்று, கல்லுாரிகளை தேர்வு செய்தனர். விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்ய, கடந்த 22ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. கல்லுாரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு, தற்காலிக ஒதுக்கீடு ஆணை நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, பொதுப்பிரிவில் 31,221; 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 2,427; தொழிற்கல்வியில் 1,318; 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரிவு தொழிற்கல்வியில் 248 மாணவர்கள் என, மொத்தம், 35,214 மாணவ - மாணவியருக்கு, பி.இ., - பி.டெக்., படிப்புக்கான, தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதை உறுதி செய்ய மாணவர்களுக்கு, இன்று மாலை 5:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் தற்காலிக ஒதுக்கீடு ஆணையை, கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அவர்களின் தற்காலிக ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இறுதி ஒதுக்கீடு ஆணை, நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகும்.
மேலும்
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
-
அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
-
3வது பதவிக்காலம் சிறப்பாக இருக்கும்; விளையாட்டாக சொல்கிறேன் என அதிபர் டிரம்ப் நகைச்சுவை
-
ருமேனியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு