சிவகாசியில் பயங்கர வெடிவிபத்து; தொழிலாளர்கள் 2 பேர் பலி

1


சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வந்துள்ளது. அங்கு இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர்.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. படுகாயம் அடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல், சிவகாசி அருகே கொங்கலா புரத்தில் மத்தாப்பு கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கம்பெனி சட்ட விரோதமாக செயல்பட்டதா? தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

2 பட்டாசு ஆலைகளில் தீ; சிவகாசியில் பெரும் பரபரப்பு: தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement