கோவில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவு
கோவை: கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை திருடிய ஊழியர்கள் 4 பேர் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகள் என மொத்தம் 8 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார்.
கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல் இருக்கிறது. திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக 1 உண்டியல் உள்ளது. தேர்த்திருவிழாவை ஒட்டி, 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 15ம் தேதி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடந்திருக்கிறது.
ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல், ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு சேர்த்து மறைத்து வைத்திருக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பிறகு சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து ஒரு உண்டியலை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் நடத்திய விசாரணையில் ஊழியர்கள் 4 பேர் உண்டியல் பணத்தை திருடியது உறுதியானதால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தற்போது கோவில் உண்டியலை திருடிய ஊழியர்கள் 4 பேர் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் பெயர் விபரம் பின்வருமாறு:
ஊழியர்கள்
1.பாலசுப்பிரமணியன்
2.சரவணன்
3.பிரதீப் குமார்
4.கிருஷ்ணராஜ்
அதிகாரிகள்
1. ராம்குமார்
2. உதயகுமார்
3. குமார்
4. உஷா நந்தினி
பிரத்யேக வீடியோ!
உண்டியலை தூக்கிய ஊழியர்கள் 4 பேர்; கடமை தவறிய அதிகாரிகள் 4 பேர்; கூண்டோடு தூக்கியடித்த அமைச்சர் ரமேஷ்: பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
டிஸமிஸ செய்யாமல் சஸபெண்ட் செய்வது சும்மா பாவ்லா காட்டத்தான். இதுக்கு இந்து அறநிலையத்துறை எங்காவது குட்டிச்சுவரில் போய் முட்டிக்கலாம
"உண்டகம் விளைப்பின் இரண்டகம் விளையும்" என்பதுபோல கோயில் உண்டியலையே திருடி சென்ற மகா பாவி வேலையாட்களை இப்போதுதான் தமிழகத்தில் காண்கிறோம் இவர்களை இப்படியே விட்டுவிட்டால் நாளைக்கு கோயிலில் கர்ப்பகிரகத்தில் உள்ள பேச்சாத சிலையையும் திருடி செல்வார்கள்
உண்டகம் விளைப்பின் இரண்டகம் விளையும்" என்ற பழ மொழிக்கு இணங்க நாளைக்கு இதே கோயில் வேலையாட்கள் கோயில் கருவறையில் உள்ள பேசாத தெய்வ சிலையையும் பெயர்த்து எடுத்து விற்றுவிடுவார்கள் என்னே இவர்களின் வேலை திறமை பக்தி இவர்களையும் இத்தனை நாட்களாக
இவைகளை வளரவிட்ட அங்குள்ள அதிகாரிகளையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் உண்டியல் வைத்து அலுவலக ஊழியர்கள் பிரித்து கொள்ளும் வழி நல்ல யோசனையாக உள்ளது. அப்படி வைக்க முடியாவிட்டால் தாலுகா மெயின் பஸ் ஸ்டண்ட் , மக்கஹ் வெகுவாக கூடும் இடங்களிலும் வயிக்கலாம்.
is it the JOB OF hr&CE minister...The HRCE commissioner should havebeen sacked. How many temples the loot is going on like this ? Are IAS officers and staff are so unethical in such a way that we need to apooint one police behind each staff working. There shouldbe statement from HRCE commissioner, as what administration he isrunning..
அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு பெரிய உண்டியல் வைக்கலாம் நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவை, தொண்டு இதன் அடிப்படையில் மன திருப்தி இருந்தால் பணம் போடுகிறோம்... மாத சம்பளம், படி காசு எல்லாம் சண்டை சச்சரவு இல்லாமல் அனைத்து மக்கள் பிரதிநிதிகள் பிரித்துக் கொள்ளலாம்.... இது தான் நியாயம், வேலை செய்யாமல் அதிகாரம் செய்வது ஆளும் தரப்பு, வேலை செய்வதாக ஆர்பாட்டம் போராட்டம் செய்வது எதிர் தரப்பு.... மாற்றி மாற்றி ஓட்டு போட்டு ஏமாந்து நிற்பது பொது மக்கள்.
சில கோவிலில் தட்டில் விழும் காணிக்கைகள் பூஜாரிகளுக்கு என ஒரு பொது உண்டியல் இருக்கும் அதை அதில் சேர்த்து விடுவார்கள்.... தேவைப்படும் போது அதை திறந்து அனைவரும் சமமாக சச்சரவு சண்டை வராமல் பகிர்ந்து கொள்வார்கள் இது பலருக்கும் தெரியாது.... திருக்கோவில் அசையா சொத்துக்கள் பறிபோகிறது, சிலைகள் திருடப்படுகிறது, விலை உயர்ந்த பழைமையான ஆபரணங்கள் உருக்கி உருண்டை ஆக்கி வாயில் போட்டுக் கொள்ளலாம்..... கேள்வி கேட்டால் வழக்கு பாயும் என மிரட்டல்.... இந்த தெய்வமே கதி என இருப்பவர்கள் எப்படி தான் வாழ்வது? மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், படிப்படியாக அரசின் கட்டுபாபாட்டிலிருந்து திருக் கோவிலை விடுவிக்க வேண்டும் அதற்கு தான் உங்களுக்கு சம்பளம்...
முன் பிள்ளையார், பின் பிள்ளையார், முருகன், நவக்கிரகம், காவல் தெய்வம் கோனியம்மன் ஆக மொத்தம் ஐந்து சன்னதிக்கு ஒன்பது உண்டியல் தேவையா? மாத சம்பளத்தை நம்பி இங்குள்ள குருக்கள் மற்றும் ஆண்டிகள் வாழ்க்கையை ஓட்ட முடியாது தட்டு காணிக்கை தான் இவர்களுக்கு தினமும் செலவுக்கு கை கொடுக்கும்.... ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, பூரம் மற்றும் அம்மாவாசை ஆகிய தினங்களில் பக்தர்கள் திரண்டு வந்து வழிபடுவது வழக்கம் மற்ற நாட்களில் பக்தர்கள் வர மாட்டார்கள் கிட்டத்தட்ட வருட திருவிழா ஏதோ நாலு காசு சேர்த்து வைக்கும் நேரம் இப்ப போயி கோவிலை சுற்றி உண்டியல் வைத்தால் யார் தான் தட்டில் காணிக்கை போடுவார்கள்? கல் சிலையை சிறைபிடித்த இந்து சமய அறநிலையத்துறை பூஜை செய்பவர்களையும் அடிமைப்படுத்துவது நியாயமா? திருக் கோவிலில் அரசுக்கு என்ன வேலை யார் உண்டியல் வைக்க அதிகாரம் கொடுத்தது? தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் நாழிக்கு ஒரு கொட்டு என சொல்வது உண்மை.... அதிகாரம் என்ற கொடுக்கை பிடுங்கி எரிந்தால் தான் இறைவனுக்கும் பக்தருக்கு நிம்மதி கிடைக்கும்...
பொறுப்பு வகிக்கும் அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் ஹிந்துக்களே ....
திருடியவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து நிரந்தரமாக கோவிலுக்குள் நுழைய விடக்கூடாது. உண்டியல் திருடி பழகியவன் நாளை சிலையை அல்லது நகைகளை திருடமாட்டான் என்று எப்படி நிச்சயமாக சொல்ல முடியும்?மேலும்
-
எங்கள் வலியெல்லாம் இனி மற்றவர்களுக்கு மருந்தாகும்; 'நீட்' தேர்வில் சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி
-
காமன்வெல்த் விளையாட்டு போட்டி; இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்று சாதனை
-
கருவின் பாலினத்தை வெளியிட்ட 'யூ டியூபர்' இர்பானுக்கு சிக்கல்
-
போரில் ஈரானுக்கு ரஷ்யா ஆதரவு அளித்ததா? புடினிடம் கேட்பேன் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
போலீசார் இல்லாத வாகன தணிக்கை சாவடி; தடையின்றி செல்லும் கனிமவள கடத்தல் வாகனங்கள்
-
உத்திரமேரூரில் பதிவான ஓட்டுகளை சரி பார்க்கும் பணி நாளை தொடக்கம் 10 இயந்திரங்களை சரி பார்க்க கேட்டுள்ளது தி.மு.க.,