ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானோரை கட்சியில் சேர்க்க ஸ்டாலின் பச்சைக்கொடி
- நமது நிருபர் -
சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களை, மீண்டும் தி.மு.க., வில் சேர்க்க, கட்சியின் தலைவர் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் கவர்னர் ரவி, நடிகைகள் குஷ்பு, நயன்தாரா, திரிஷா ஆகியோரை கொச்சையாகவும், அவதுாறாகவும் பேசிய சில பேச்சாளர்கள் மீது, தி.மு.க., தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியது.
மன்னிப்பு கடிதம்
அத்துடன் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய, ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாநகர, பகுதி, நகர, ஒன்றிய, வட்ட செயலர்கள் மீதும், தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுத்தது.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளிடம் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக, ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள், பெண் கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட நிர்வாகிகளில் சிலர், த.வெ.க.,விற்கு ஓட்டம் பிடித்து விட்டனர்.
தமிழகம் முழுதும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான 150 பேர், மீண்டும் தங்களை கட்சியில் சேர்க்கும்படி, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து காத்திருக்கின்றனர்.
விசுவாசிகள்
கடந்த மூன்று மாதங்களாக, அவர்கள் அனைவரும் த.வெ.க.,விற்கு ஓட்டம் பிடிக்காமல், தி.மு.க.,வின் விசுவாசிகளாக இருந்து வருகின்றனர். எனவே, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு, கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளனர்.
அவரும், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களிடம், மன்னிப்பு கடிதம் பெற்று, கட்சியில் சேர்க்க பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யோவ் ... மொதல்ல ஒதுங்கி வழிய விடு.... மக்கள் இனிமேலாவது நிம்மதியா வாழனும் ... சரியா
இப்படி ஒரு பரம திமுக விசுவாசிதான் அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன். . ஆனால் அந்த" சார் " குற்றவாளி கட்சியிலேயேதான் யிருக்கிறார். அதுபோக தலைவர் லண்டன் பயணத்திற்கு பிறகு எடுத்த முக்கியம் அதிரடி முடிவு.மேலும்
-
இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
-
அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்