மாநகராட்சி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர்:தமிழ்நாடு
நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ரமேஷ்
தலைமையில், கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில்,
நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம்,
ஓய்வூதியம் வழங்க வேண்டும், பதவி உயர்வு, பணியிடை மாறுதல்களை
கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும், 2023 சட்டத்தின்படி நகராட்சி,
மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலி
பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அரசு ஊழியர் சங்க
தலைவர் அன்பழகன், செயலாளர் பொன் ஜெயராம் உள்பட, பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கு; செந்தில் பாலாஜியிடம் விசாரணை
-
நீட் எதிர்ப்பு போராட்டம்; குபீர் போராளிகளுக்கு கொண்டாட்டம்!
-
இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
Advertisement
Advertisement