வாலிபர் மரணம்; கண்கள் தானம்

ஈரோடு;ஈரோடு மாவட்டம் சோழசிராமணி, பி.வேலுார், அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் துடி அரசு, 29;

ஈரோடு ஈஞ்சம்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 23ல் வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினார். சோளங்காபாளையம் சாலை, பொன்னம்பாளையம் என்ற இடத்தில் சாலையோர சிக்னல் போர்டில் மோதி விழுந்தார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்கப்பட்ட நிலையில் இறந்தார். இறந்த துடி அரசின் கண்களை, அவரது பெற்றோர் தானமாக வழங்கினர்.

Advertisement