24 மணி நேரத்தில் 30 கோடி பேர் விசிட்; உலக சாதனையை முறியடித்த பிரதமர் மோடி ரீல்ஸ் வீடியோ
நமது சிறப்பு நிருபர்
பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளைக் கடந்து உலக சாதனை படைத்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக புதிய மசோதா கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ, 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளைக் கடந்து புதிய உலக சாதனை படைத்து இருக்கிறது. அதுமட்டுமின்றி 1 கோடியே 60 லட்சம் பேர் லைக் செய்து இருக்கின்றனர்.
வரலாற்றிலேயே ஒரே நாளில் அதிகப்படியான பார்வைகளை பெற்ற வீடியோ என்ற பெருமையை இந்த ரீல்ஸ் தட்டி சென்றது. பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட், உலகக்கோப்பையின் போது பிடிஎஸ் குழுவை சந்தித்த போது பதிவிட்ட வீடியோ 24 மணி நேரத்தில் 30 கோடி பார்வைகளைப் பெற்றதே உலக சாதனையாக இருந்தது.
தற்போது பிரதமர் மோடியின் இந்த ரீல்ஸ் வீடியோ அந்த சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. ''நான் பதிவிட்ட வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது; ஆலோசனைகளை வழங்கிய இளம் நண்பர்களுக்கு நன்றி '' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இளைஞர்களை விட வயதானவர் அதிகமாக உள்ளதையே உணர்த்துகிறது
இப்படித்தான் தமிழக முன்னாள் நிரந்தர முதல்வர் விதம் விதமாக விக், ட்ரெஸ், ஷூ போட்டு ஃபோட்டோ ஷூட் செய்து தினமும் தினசரிகளில், டிவியில் காட்சி கொடுத்து மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்து புளகாங்கிதம் அடைந்தார்! நல்லா பொழுது போச்சு!
இதற்க்கே ஒரு வெற்றி விழா நடத்தி விருது கொடுக்க வேண்டும்! இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர்! பூமித் தாயின் தவப் புதல்வர்! ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்த தன்னலமற்ற தியாகி! ஏழைப் பங்காளர்! வாழ்க பாரதம்!
இதை நினைத்தே பலர் மனம் வெம்பி சாகப்போகிறார்கள்.
இனிமேலாவது இந்த மெடாவை கட்டுபடுத்தி இன்ஸ்டாவை இழுத்துபிடித்து கண்காணிக்க தைரியமாக நடவடிக்கை எடுங்க. அதவிட்டுட்டு கோடி பேரு பார்தானுங்கனு கொண்டாடிகிட்டு இருக்காதீங்க.
மோடிஜி வாழ்க பல்லாண்டுகாலம்
இங்கே தான் இப்படி என்று நினைத்தால் அங்கேயும் அப்படித்தானா? விளங்கிடும் நாடு!
இது மாதிரி செய்திகள் அடிக்கடி வருது...
உலக மகா ரீல்ஸ் மன்னன்னு ஒரு விருது கொடுங்க.. இல்லையென்றால் அந்த விருதை பல்வேறு ராஜதந்திரங்கள் வழியாக நாங்களே பிடுங்கி கொள்வோம் உவர் ஓனர்...
நான் 30 கோடியில் இல்லை
sudha அப்போது டாஸ்மாக்கில் இருந்திருப்பார்மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது