இருட்டில் லாடனேந்தல் பாலம் அச்சத்தில் கிராம மக்கள்
திருப்புவனம்:திருப்புவனம் அருகே லாடனேந்தல் - பெத்தானேந்தல் இடையே புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் விளக்குகள் பொருத்தப்படாததால் மக்கள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர்.
மணல்மேடு, பெத்தானேந்தல், சடங்கி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்புவனம் வர சுற்றி வர வேண்டியிருந்தது. பெத்தானேந்தல் - லாடனேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட கோரிய நிலையில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 2022 ஜூலையில் 18 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
ஆனால் பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் மாலை ஆறு மணிக்கு மேல் பாலத்தில் செல்ல கிராம மக்கள் அச்சமடைகின்றனர். பாலத்தில் மின் விளக்குகள் அமைத்தால் அதன் செலவீனத்தை யார் ஏற்றுகொள்வது என லாடனேந்தல், பெத்தானேந்தல் ஊராட்சிகளுக்கு இடையே பிரச்னை எழுந்ததால் இதுவரை மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.
மேலும்
-
தரண் மருத்துவமனையில் ஆப்பரேஷன் பெண்ணுக்கு கிடைத்தது மறுவாழ்வு
-
டேபிளில் இருந்து விழுந்தவர் பலி
-
தற்கொலை எச்சரிக்கைக்கு பின் வாலிபர் மாயம்
-
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய 2 பேர் சஸ்பெண்ட்
-
போக்குவரத்து துறையை மேம்படுத்த பட்ஜெட்டில் ரூ.28,000 கோடி எதிர்பார்ப்பு
-
அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வு