வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’
கோவை: மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடை நடத்துவோரில் சிலர், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வரி வசூலர்கள் பலமுறை நேரில் தெரிவித்தும் வாடகை செலுத்தாமல் இருந்தனர்.
டி.பி.ரோட்டில் 1 கடை, ஆரோக்கியசாமி ரோட்டில் 3 கடைகள், டி.வி. சாமி ரோட்டில் 1 கடை, சுப்ரி வீதியில் 1 கடை, துடியலுாரில் 2 கடைகள், தக்காளி மார்க்கெட்டில் 2 கடைகள் என 10 கடைகள் நேற்று மூடப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டன.
இக்கடைகளை நடத்தி வந்தவர்கள் மாநகராட்சிக்கு ரூ.54.38 லட்சம் வாடகை செலுத்த வேண்டியிருந்தது. அதிரடி நடவடிக்கை எடுத்ததால், ஒரே நாளில் ரூ.25 லட்சம் வசூலிக்கப்பட்டதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய திறனாய்வு தேர்வில் தொடர் சாதனை படைக்கும் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
-
நாய்கள் கருத்தடை திட்டம் விரிவாக்கம் அமைச்சர் மதன்ராஜா
-
இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 26)
-
சட்டம் அறிவோம் பகுதிக்கு ஐகோர்ட் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா?
-
நலம் நம் பலம் / முதலுதவி சிகிச்சையில் செய்யும் தவறு அரைகுறை அறிவால் போயிரும் உயிரு
-
மாநில மகளிர் ஹாக்கி துவக்கம்
Advertisement
Advertisement