அரசு வேலை கேட்கிறது பா.ஜ.,

கோவை: கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பா.ஜ.,மாநில செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். 

அவரது அறிக்கை: 

2025 செப்.,27ல் கரூரில் த.வெ.க. தலைவரும் தற்போதைய முதல்வருமான ஜோசப் விஜய் பங்கேற்ற சட்டசபை தேர்தல் பிரசாரக்கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. அதே போல், கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Advertisement