போலீஸ் போல் பேசி மோசடி;இருவர் கைது
கோவை: கோவையில் வசிக்கும் வடமாநில வியாபாரி ஒருவரிடம் போனில் பேசிய மர்ம நபர்கள், எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், ஆபாச படங்கள் பார்த்தது, பகிர்ந்ததற்காக உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி மிரட்டினர்.
வழக்கில் இருந்து தப்பிக்க பணம் கொடுக்க அறிவுறுத்தியதை நம்பி ரூ.38 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பினார். மோசடி செய்தது தெரிந்து அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பச்சாபாளையத்தைச் சேர்ந்த பென்னி, 51 சரவணம்பட்டியைச் சேர்ந்த கிஷோர்குமார், 21 ஆகியோரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், மோசடியில் தொடர்புடைய பச்சாபாளையத்தைச் சேர்ந்த சபரி , 25 மற்றும் நேரு நகரை சேர்ந்த வினு, 21 ஆகியோரை கைது செய்தனர். கோவை ஹரிபிரசாத் என்பவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய திறனாய்வு தேர்வில் தொடர் சாதனை படைக்கும் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
-
நாய்கள் கருத்தடை திட்டம் விரிவாக்கம் அமைச்சர் மதன்ராஜா
-
இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 26)
-
சட்டம் அறிவோம் பகுதிக்கு ஐகோர்ட் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா?
-
நலம் நம் பலம் / முதலுதவி சிகிச்சையில் செய்யும் தவறு அரைகுறை அறிவால் போயிரும் உயிரு
-
மாநில மகளிர் ஹாக்கி துவக்கம்
Advertisement
Advertisement