அரசு பஸ் -=- சரக்கு வேன் மோதல் ஒருவர் பலி
திருப்புவனம், ஜூலை 26-
மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் நேற்று அதிகாலை அரசு பஸ்சும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓருவர் உயிரிழந்தார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ 40, சரக்கு வேன் ஓட்டுனரான இவர் மனைவி ஆரோக்கிய ஜான்சி 35, யுடன் காய்கறி ஏற்றுவதற்காக மதுரைக்கு நான்கு வழிச்சாலை வழியாக சென்றார். நான்கு வழிச் சாலைப்பணி நடந்து வருவதால் ஒரே பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. நேற்று அதிகாலை மூன்று மணிக்கு திருப்புவனம் கழுகேர்கடை விலக்கு அருகே செல்லும் போது எதிரே கோவையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு விரைவுப்பேருந்து நேருக்கு நேர் மோதியது.
இதில் இடிபாடுகளில் சிக்கி வேன் டிரைவர் ஆண்ட்ரூ உயிரிழந்தார். காயமடைந்த மனைவி ஜான்சி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்புவனம் போலீசார் அரசு பஸ் டிரைவர் சசிக்குமாரிடம் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தேசிய திறனாய்வு தேர்வில் தொடர் சாதனை படைக்கும் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
-
நாய்கள் கருத்தடை திட்டம் விரிவாக்கம் அமைச்சர் மதன்ராஜா
-
இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 26)
-
சட்டம் அறிவோம் பகுதிக்கு ஐகோர்ட் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா?
-
நலம் நம் பலம் / முதலுதவி சிகிச்சையில் செய்யும் தவறு அரைகுறை அறிவால் போயிரும் உயிரு
-
மாநில மகளிர் ஹாக்கி துவக்கம்