ஆடி பொங்கல் உற்ஸவம்

பெருநாழி: பெருநாழி அருகே பொந்தம்புளியில் உள்ள சித்தி விநாயகர், வாழவந்தாள் அம்மன் கோயிலில் வருடாந்திர ஆடி பொங்கல் உற்ஸவம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் 108 பஞ்சமுக தீபம் ஏற்றி விளக்கு பூஜை நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று வாழவந்தாள் அம்மன் கண் திறந்து எழுந்தருளா வைபவம், மறுநாள் பொங்கல் வைத்தல், பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகள், பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை பொந்தம்புளி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement