கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளாட்சி துறை இயக்குநர் ஆலோசனை

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆதர்ஷ் ஆய்வு செய்து, வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆதர்ஷ் ஆய்வு செய்து பின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், பொதுமக்களுக்கு குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை தடையின்றி வழங்குவது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தானியங்கி குளோரினேஷன் இயந்திரம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது. குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை உடனடியாக சரி செய்வது. காக்காயாந்தோப்பு செட்டிக்குளத்தை சீரமைத்து, 3.35 கோடி ரூபாய் மதிப்பில் திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம் அமைத்தல், 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் குடிநீர் விநியோக முறைகள் குறித்து  ஆலோசனை செய்யப்பட்டது. 

கூட்டத்தில், அய்யப்பன் எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி,  உதவிப்பொறியாளர் நாகராஜன் இளநிலைப்பொறியாளர்கள் சுரேஷ், சரஸ்வதி, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கலந்து கொண்டனர்.

Advertisement