சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு



தர்மபுரி: தர்மபுரி டவுன் நெசவாளர் காலனியிலுள்ள மஹாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பால், இளநீர், சந்தனம், தேன், குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் மற்றும் மஹாலிங்கேஸ்-வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல் கடகத்துார் சோமேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர், காரிமங்-கலம் அபிதகுஜாம்பாள், ஆருண்ணேஸ்வரர், அதியமான்-கோட்டை சோமேஷ்வரர், பி.எஸ்.அக்ரஹாரம் மரகதாம்பிகா சமேத ஸ்ரீமார்க சகாய ஈஸ்வரன் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், சந்தனம், தேன் உள்-ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரை-கோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

Advertisement