'2 எம்.எல்.ஏ.,க்களும் வரலையே!'
திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ, புதுக்கோட்டையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ., எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்தில், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இருந்தோம். தற்போது, த.வெ.க., மாற்று அரசியலை முன் வைத்துள்ளது. ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஆட்சி நடத்துவோம் என்றும், குறிப்பாக லஞ்ச, ஊழலுக்கு எதிராக ஆட்சி நடத்துவோம் என்றும் கூறியுள்ளது. அதற்காகத்தான் தற்போது த.வெ.க.,விற்கு ஆதரவளித்துள்ளோம்.
'என்றைக்கு தி.மு.க., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததோ, அன்றைக்கே நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வருவது என்று முடிவு செய்து விட்டோம்' என்றார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க வெளியே வந்து என்ன பிரயோஜனம்... இவங்க கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் வர மறுத்துட்டாங்களே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
மேலும்
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
காங்., கட்சியினர் போராட்டம்