கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது 'குண்டாஸ்'
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே யுள்ள எர்ரப்பட்டியை சேர்ந்தவர் நஞ்சம்மாள், 45. இவரது தம்பி மாதேஷ், 40. இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் நஞ்சம்மாள் வீட்டின் முன் கழுத்த-றுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதியமான்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் மாதேஷின் மனைவி கீதா, 33, கூலிப்படை வைத்து கணவர் மற்றும் நஞ்சம்மாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதை-யடுத்து, கீதா மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் உள்பட, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கீதா மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அருண் கபிலன் பரிந்துரைப்படி, கலெக்டர் சரவணன் உத்தர-விட்டார். இதையடுத்து, சேலம் மத்திய சிறையிலுள்ள கீதா மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஹரி ராமச்சந்திரன், 36, ஆறு-முகம், 40, ரங்கநாதன், 33, சந்துரு, 26, சண்முகம், 39, ஆகிய, 6 பேரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை, அதியமான் கோட்டை போலீசார் வழங்கினர்.
மேலும்
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
காங்., கட்சியினர் போராட்டம்