ஜெர்தாலாவ் கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே ஓ.ஜி.ஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிவா மணிமண்டபம் எதிரில் பஞ்சப்பள்ளி அணையில் இருந்து வரும் உபரி நீர் எர்ணஹள்ளி, திருமல்வாடி, கிட்டம்பட்டி, பாப்-பாரப்பட்டி, சிட்லகாரம்பட்டி, ஓ.ஜி.அள்ளி வழியாக இன்டூர் வரை செல்லும் ஜெர்தலாவ் கிளை கால்வாய் உள்ளது.


இதை ஆக்கிரமித்து கான்கிரீட் சுவர் கட்டும் பணி நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் அதிக-ளவு தண்ணீர் வரும் இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்படுவதால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது தடைபடும் எனவும், சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும், விவசாயிகள் அச்சம் தெரிவிகின்றனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கான்கிரீட் சுவரை அகற்றி, கால்-வாயை மீட்க, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement