ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல்: எம்.பி., வரவேற்பு
நாமக்கல்:நாமக்கல், கொ.ம.தே.க.,-எம்.பி., மாதேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல்லில்
இருந்து பெரம்பலுார் வழியாக அரியலுாருக்கு புதிய ரயில்வே பாதை
அமைக்கும் பணிக்கு, முதற்கட்டமாக விரிவான செயல்திட்ட அறிக்கை
தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ரயில்வே
பணிகளுக்காக, 2009-14 நிதியாண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு, 879 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த
நிதியாண்டில், 8 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டு, 7,611 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், கடந்த, ஏப்.,
1ல், 8 புதிய ரயில் வழித்தடங்கள், 3 அகல ரயில் பாதையாக மாற்றும்
திட்டங்கள், 8 இரட்டை ரயில் பாதைகள் என மொத்தம், 1,874 கி.மீ.,
துாரத்திற்கு, 27,282 கோடி ரூபாய் மதிப்பில், 19 திட்டங்களுக்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு புதிய ரயில்வே திட்டங்கள் அறிவித்துள்ள மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
கோவில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவு
-
சிவகாசியில் பயங்கர வெடிவிபத்து; தொழிலாளர்கள் 2 பேர் பலி
-
துணிச்சலை வெளிப்படுத்திய வீரர்கள்; கார்கில் வெற்றி தினத்தில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!
-
அக்டோபரில் இந்தியா வரும் பிரேசில் அணி; வரவேற்க தயாராக இருக்கும் இந்திய கால்பந்து ரசிகர்கள்!
-
வறுமை 'விளையாடிய' போதும் விளையாட்டில் சாதித்த முரளி கிருஷ்ணன்: ஒரு ஹாக்கி வீரர் வென்ற கதை