அனுபவ நிலங்களுக்கு பட்டா வரும் ஆக., 5ல் போராட்டம்?

ராசிபுரம்:நாமகிரிப்பேட்டையில் நடந்த, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில், அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு, ஆக., 5ல் கலெக்டர் ஆபீஸ் முன் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தின் முதல் மாநாடு நாமகிரிப்பேட்டை அடுத்த திம்மநாயக்கன்பட்டியில் நடந்தது. மாநாட்டிற்கு வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநாட்டில், '2006 வன உரிமை சட்டப்படி, கார்கூடல்பட்டி, நாரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி, ஊனாந்தாங்கல், திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து அனுபவ நிலங்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும். பிரபஞ்சசோலை பகுதியில் பொதுமக்களின் வனப்பாதையை மறித்து பள்ளம் தோண்டிய வனத்துறை அதிகாரிகள் மீது 2006, வன உரிமை சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாதையை சீரமைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும், வன உரிமை சட்டப்படி, அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி வரும்
ஆக., 5ல் நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன் பெருந்திரள் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

Advertisement