கலை அறிவியல் கல்லுாரியில் மாணவர் மன்ற துவக்கவிழா

வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், மாணவர் மன்ற துவக்க விழா, கல்லுாரி முதல்வர் கோபி தலைமையில் நடந்தது. துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.

விழாவில் மாணவர் மன்றத்தின் தலைவராக கரும்பாலவிநாயக், துணை தலைவராக ரேணுகா,  செயலாளராக கோகுல்ராஜ், இணை செயலாளர்களாக தரண்யா,திருக்குமரன், பொருளாளராக மதுமதி, காவியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பதவியேற்பு விழாவை தொடர்ந்து, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். விழாவில், புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியர் அபிராமன் நன்றி கூறினார்.

Advertisement