இரவு நேரத்தில் ஒளிராத உயர் கோபுர மின்விளக்கு

வால்பாறை: வால்பாறையில், இரவு நேரத்தில் ஒளிராத மின்விளக்குகளால் சிதம்பரனார் நகர் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது சிதம்பரனார் நகர். இங்கு உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரிவதில்லை. இதனால், இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மக்கள் கூறுகையில், ‘வால்பாறை நகரை ஒட்டி சிதம்பரனார் நகர் அமைந்திருந்தாலும், எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கடந்த ஆண்டு மினி உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்த மின்விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால், சிறுத்தை, கரடி, யானை நடமாட்டம் மிகுந்த பகுதியில், எவ்வித பாதுகாப்பும் இன்றி அச்சத்துடன் வாழ்கிறோம். பழுதடைந்துள்ள மின்விளக்குகளை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும்,’ என்றனர்.

Advertisement