சிதம்பரம் அருகே சிறுமி 4 மாத கர்ப்பம்: குழந்தை திருமணம், போக்சோவில் வழக்கு
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள கே.ஆடு கள்ளிக்காட்டு தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் பரஞ்சோதி,22, இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிள்ளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வீட்டில் வைத்து தாலி கட்டியுள்ளார்.
இதில் அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை உறவினர்கள் அழைத்துக் கொண்டு கடலுார் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சிதம்பரம் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சூரியகுமார்,23; இவர் கீழஅணுவம்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் மகளிர் போலீசார் பரஞ்சோதி,சூரியகுமார் ஆகிய இருவர் மீது குழந்தை திருமண சட்டத்தில் வழக்கு மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்