காங்., கட்சியினர் போராட்டம்
திண்டிவனம்: டில்லியில் மாணவர்கள் மீது நடந்த தடியடியை கண்டித்து, திண்டிவனத்தில் காங்., கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
டில்லியில் நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகக்கோரியும் காக்ரோச் ஜனதா பார்ட்டி மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர்
இதனை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக திண்டிவனம் காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, காந்தியார் திடலில் முடிந்தது.
மாவட்ட பொருளாளர் சிவா தலைமையில் நடந்த ஊர்வலத்தில் ஓ.பி.சி., அணி மணி, கோவிந்தன், நகர தலைவர் சத்தீஷ்குமார், வழக்கறிஞர் விஜயன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஒரே வாகனத்துக்கு 250 அபராத ரசீதுகள்! அபராத மதிப்பு ரூ.3 லட்சம்
-
பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு; மாற்று ஏற்பாடு செய்யாமல் வாரியம் அலட்சியம்
-
குளித்தலையில் டாக்டர் பற்றாக்குறை கரூர், திருச்சிக்கு செல்லும் நோயாளிகள்
-
மாயனுார் கதவணைக்கு 300 கன அடி நீர்வரத்து
-
அள்ளப்படாத குப்பை: தொற்று அபாயம்
-
சேதமடைந்த நீரேற்று நிலைய தடுப்பு சுவர்: ஊழியர்கள் அச்சம்