அள்ளப்படாத குப்பை: தொற்று அபாயம்

கரூர்:கரூர் அருகே, பல நாட்களாக தேங்கியுள்ள குப்பையை அள்ளாததால், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர்- - நெரூர் சாலை, ஒத்தக்கடை பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பை பல நாட்களாக அள்ளப்படாமல் உள்ளது. இதனால், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர். மேலும், குப்பைகள் அழுகி கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ள நிலையில், இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் - நெரூர் சாலை ஒத்தக்கடை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை, அகற்ற நெரூர் வடக்கு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement