மாயனுார் கதவணைக்கு 300 கன அடி நீர்வரத்து

கரூர்:மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 300 கன அடியாக இருந்தது.


தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 2.84 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க் காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement