காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி; தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி அசத்தல்
கிளாஸ்கோ: காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்காக தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டின் ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி கலந்து கொண்டார்.
வெற்றி குறித்து அவர் கூறுகையில், "தங்கம் வெல்வதற்கான திறனை நான் வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, பயிற்சியின் போது செயல்பட்டதை ஒப்பிடும் போது, நான் திறம்பட செயல்படவில்லை. இருப்பினும், வெள்ளி வென்றது மகிழ்ச்சியை அளிக்கிறது.
எனக்கு பக்கபலமாக இருந்த இந்திய விளையாட்டு ஆணையம், பளுதூக்கும் கூட்டமைப்பு மற்றும் என்னுடைய பயிற்சியாளர் விஜய் ஷர்மா ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் கூறினார்.
போட்டியின் 4வது நாள் நிறைவில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன், பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதில், வெண்கலத்தை தவிர எஞ்சிய 3 பதக்கங்களும் பளு தூக்குதலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.30 லட்சம் பரிசு
பாராட்டு தெரிவித்து முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கை; ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்.....
Superமேலும்
-
வரும் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்
-
பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா; அமளிக்கு இடையே லோக்சபாவில் தாக்கல்
-
உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்கணும்; அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அண்ணாமலை உறுதி
-
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி... 5 பேர் படுகாயம்
-
போராட்டம் நடக்கிறது என்பதால் தடியடி நடத்தக்கூடாது: சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
-
பார்லியில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு