அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தம்; கச்சா எண்ணெய் விலை சரிவு

4



நமது நிருபர்




அமெரிக்காவும், ஈரானும் தங்கள் தாக்குதல்களை நிறுத்தியதை அடுத்து எண்ணெய் விலைகள் குறைந்தன.

சர்வதேச போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடை ஏற்படுமோ என்ற அச்சம் தணியாததால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் போர் முழு வீச்சில் மீண்டும் துவங்கியதை தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 92 டாலராக அதிகரித்து வர்த்தகம் ஆகி வந்தது. தற்போது கடந்த 13 நாட்களாக நடந்து வந்த இந்த தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார். புதிய தாக்குதல் நடத்தும் திட்டம் தயாரிக்கப்பட்ட போதிலும் நிறுத்திவைக்கும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்.

இதன் எதிரொலியாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. அதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் பேரலுக்கு 5 டாலர்கள் குறைந்துள்ளது. தற்போது ஒரு பேரால் 88.03 டாலர்களுக்கு விற்பனையாகிறது.

Advertisement