விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கிள்ளை: பயிர் கடனை முழுமையாக தள்ளூபடி செய்யக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கிள்ளை மற்றும் தில்லைவிடங்கன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு, கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழக அரசு விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; சிதம்பரம் கடைமடை பகுதியை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், கற்பனைச்செல்வம், ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் நல்லத்தம்பி, அஷ்லாம், ஜீவா, பொன்னுசாமி, சந்திரசேகர், பட்டாபிராமன், தியாகராஜன், தனசேகரன், ஹாஜாமொய்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
திருமாவளவன் வாழ்த்து
-
பாரதியார் பல்கலைக்கூட கலந்தாய்வு பட்டியல் வெளியீடு
-
ஆன்லைன் மூலம் மோசடி பெண்ணிடம் ரூ.5 லட்சம் அபேஸ்
-
எம்.பி.பி.எஸ்., ‘சீட்’ ஒதுக்கீடு அரசுக்கு தி.மு.க., திடீர் ஆதரவு
-
தருமபுரம் ஆதினத்தின் பாரம்பரிய சுகாதார பூங்கா அமைக்கும் பணி :கவர்னர் துவக்கிவைப்பு
-
ஆரோவில் – தாய்லாந்து கலாசார பரிமாற்ற விழா