காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
காட்டுமன்னார்கோவில்: காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் புத்துாரை சேர்ந்த ரத்தினம் மகன் செல்வம் 65; இவரது மகன் தமிழ்வாணன் 30; மெக்கானிக்கல் இன்ஜினியர்.
தஞ்சாவூரில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் மயிலாடுதுறையில் வேலை செய்த போது, ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பெண் தமிழ்வாணனை திருமணம் செய்ய மறுத்து, வேறு நபரை திருமணம் செய்துகொண்டார்.
இதனால், தமிழ்வாணன் மனமுடைந்த நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது பெற்றோர் கண்டித்து, ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து இரவு சாப்பிட்டு துாங்க சென்றவர் படுக்கை அறையில், துாக்கிட்டு கொண்டார்.
இதனை பார்த்த பெற்றோர் அவரை உடன் அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்வாணன் சடலத்டதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
மேலும்
-
திருமாவளவன் வாழ்த்து
-
பாரதியார் பல்கலைக்கூட கலந்தாய்வு பட்டியல் வெளியீடு
-
ஆன்லைன் மூலம் மோசடி பெண்ணிடம் ரூ.5 லட்சம் அபேஸ்
-
எம்.பி.பி.எஸ்., ‘சீட்’ ஒதுக்கீடு அரசுக்கு தி.மு.க., திடீர் ஆதரவு
-
தருமபுரம் ஆதினத்தின் பாரம்பரிய சுகாதார பூங்கா அமைக்கும் பணி :கவர்னர் துவக்கிவைப்பு
-
ஆரோவில் – தாய்லாந்து கலாசார பரிமாற்ற விழா