வேலைவாய்ப்பு பெற்று தருவதில் மகாலட்சுமி கல்வி நிறுவனங்கள் முதன்மை 

வேலைவாய்ப்பு பெற்று தருவதில் கடலுார் மகாலட்சுமி கல்வி நிறுவனங்கள் முதன்மை பெற்று வருகிறது என, அதன் தலைவர் ரவி கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடலுார் மாவட்டத்திலேயே அரசு தேர்வில் மாநில அளவில், அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த ஒரே கல்லுாரியாக பூண்டியாங்குப்பம் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி திகழ்கிறது.

கடந்த ஏப்., மாதம் நடந்த அரசு வாரிய தேர்வில் மாநில அளவில் இக்கல்லுாரி மாணவர்கள் 10 பேர், முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

பல்வேறு பாடங்களில், 98 மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். மேலும், 54 பாடங்களில் அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

மின்னியல் துறை, 3 ம் ஆண்டு மாணவர்கள் தனவேந்தன், ஜெனீசன், ஜனகன், ராமநாதன், இயந்திரவியல் துறை 3ம் ஆண்டு மாணவர்கள் நிவாஸ், விஜயசாரத் ஆகியோர், 300க்கு 300 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

2ம் ஆண்டு மாணவர்கள் சிவசந்திரன், அபுபக்கர் சித்திக், சபரிநாதன், நரேந்திரகுமார் ஆகியோர், 700க்கு 700 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாராட்டரி டெக்னாலஜி, டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எல்க்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், டிப்ளமோ அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் ஆண்டிலும் சேர்க்கை பெறலாம்.

ஓவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பயிற்சியை முடிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.

கடலுார் மஞ்சக்குப்பம் சண்முகம் தெருவில், 2002ம் ஆண்டு முதல் ஸ்ரீ மகாலட்சுமி மேனேஜ்மென்ட் அண்ட் கேட்ரிங் டெக்னாலஜி கல்லுாரி அழகப்பா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது. இங்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இங்கு மூன்றாண்டு பி.எஸ்சி., கேட்ரிங் அண்டு ஓட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் டிப்ளமோ இன் கேட்ரிங் அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் ஆகிய பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது.

குறைந்த கல்வி கட்டணத்தில் ஓட்டல் நிர்வாகம் மற்றும் சமையல் கலை தொடர்பான கல்வியை வழங்குவதால் முன்ணணி கேட்ரிங் கல்லுாரியாக திகழ்கிறது.

மகாலட்சுமி ஐ.டி.ஐ.,யில் தமிழக அரசு ஓதுக்கீட்டில், முதல் 150 மாணவர்களுக்கான இலவச ஐ.டி.ஐ., சேர்க்கை நடக்கிறது.

8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் சேர்க்கை பெறலாம். ஓராண்டு பயிற்சிகளான ஆட்டோமொபைல் மெக்கானிக், எலக்ட்ரிக்கல், டெக்னீஷியன், 'ஏசி' மெக்கானிக், வெல்டிங் டெக்னீஷியன் பிரிவிலும் சேர்க்கை பெறலாம்.

37ஆண்டுகள் கல்வி பணியில் அனுபவம் வாய்ந்த மகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் மகாலட்சுமி பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மற்றும் கேட்ரிங் நிறுவனங்களில் பயிற்சியை முடிக்கும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement