டாஸ்மாக் பணியாளர் 3 பேர் சஸ்பெண்ட்
சேலம்; சேலம், கோரிமேட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்கப்படும் மதுபாட்டில்
களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்-ளது. அதனால், டாஸ்மாக் பணியாளர், குடிம-கன்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தர மறுக்கும் குடிமகன்களுக்கு, கேட்ட சரக்கு இல்லையென கூறி, திருப்பி அனுப்பப்பட்டதால், பிரச்னை எழுந்தது பற்றி புகார் சென்றது. அரசு உத்தரவிட்டும், அதைமீறி கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்-பாக நடந்த விசாரணையில், 10 ரூபாய் அதிகம் வசூலிப்பது உறுதியானது.
அதையடுத்து, டாஸ்மாக் பணியாளர்கள் சீனி-வாசன், பத்மநாபன், ராஜசேகர் ஆகிய மூவ-ரையும் சஸ்பெண்ட் செய்து, சேலம் மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் சவுந்திரபாண்டியன் உத்தர
விட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement