ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் 

கோவை: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  

புதிய மருத்துவத் திட்டம் அரசாணை எண் 123ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளை திருத்தம் செய்து உத்தரவிட வேண்டும், மருத்துவமனைகளில் ஓய்வூதியர்களுக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள், குடும்பத்தினர் பங்கேற்றனர்.

Advertisement