ஆக. 8ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் ஆக. 8ம் தேதி, நடத்தப்படுகிறது.
திருப்பூர் – பல்லடம் ரோட்டிலுள்ள எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லுாரியில், காலை, 8:30 மணி முதல் மாலை, 3:00 மணி வரை முகாம் நடைபெறும். இம்முகாமில், 200க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ. – டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற் கல்வி கற்றவர்கள், டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்துவகை கல்வித்தகுதியுள்ளோரும் பங்கேற்கலாம்.
தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. மேலும் விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.