தி.மு.க., 'ஆல்பா' கொரோனா த.வெ.க., 'பீட்டா' கொரோனா

@quote@ காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமை, காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் வேண்டுகோளை ஏற்று, இடைச்செருகல் தீர்மானத்தை முதல்வர் விஜய் நிறைவேற்றினார்.
தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கும்போது, காவிரி நீரைப் பெற, கர்நாடக அரசுடன் முதல்வர் விஜய் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் என்ன? ​காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பிரச்னையில், த.வெ.க.,வும், தி.மு.க.,வும் இணைந்து நாடகமாடுகின்றன. மக்கள் விரோத நடவடிக்கைகளில், தி.மு.க., 'ஆல்பா கொரோனா வைரஸ்' என்றால், த.வெ.க., 'பீட்டா கொரோனா வைரஸாக' செயல்படுகிறது.

- இன்பதுரை, அ.தி.மு.க., - எம்.பி.,quote

Advertisement