மின்சாரம் தாக்கியவர் பலி

தர்மபுரி; தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நல்ல-சேனஹள்ளி பஞ்., கொமத்தம்பட்டியை சேர்ந்-தவர் ஞானஜோதி, 24, மைக் செட் கட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம், தர்மபுரி, பழைய ரயில்வே லைன் வீதியில் உள்ள நாககன்னி மாரியம்மன் கோவில் திருவிழா-விற்கு மைக் செட், பல்புகள் போடும் பணிக்காக சென்றுள்ளார்.

அப்போது, ஸ்பீக்கரை கட்டும்போது,

ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து, ஏணியில் இருந்து துாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தர்ம-புரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement