5.972 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது: 2 பேர் தலைமறைவு

மேட்டூர்; மேட்டூர் அணை வலதுகரை பகுதியில், கட்டை பையில் பதுக்கி வைத்திருந்த, 5.972 கிலோ கஞ்-சாவை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.


மேட்டூர் இன்ஸ்பெக்டர் (பொ) மஞ்சுநாதன் மற்றும் போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்படி நேற்று மாலை, 3:30 மணிக்கு மேட்டூர் அணை வலதுகரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் அங்கு பைக்கில் நின்ற நபர் வேகமாக ஓட்டி சென்று விட்டார். அங்கு நின்றிருந்த கொளத்துார் ஒன்றியம், லக்கம்பட்டி ஊராட்சி, சின்னதண்டா, கூலி தொழிலாளி சேரன், 27 என்பவர் வைத்தி-ருந்த கட்டை பையை சோதனை செய்தனர். அதில், 2.98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 5.972 கிலோ கஞ்சா பண்டலாக இருப்பது தெரியவந்-தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் சேரனை கைது செய்தனர்.விசாரணையில் பைக்கில் தப்பி சென்றது சின்ன-மேட்டூரை சேர்ந்த தம்பிதுரை என்பதும், அவர் தன்னுடன் கஞ்சா விற்க வந்ததாகவும், இரு-வரும் சின்னதண்டாவை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமார் என்பவரிடம் கஞ்சாவை மொத்த-மாக வாங்கி சில்லறைக்கு விற்பனை செய்ய முயன்றதாகவும் சேரன் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த மேட்டூர் போலீசார் சேரனை கைது செய்த நிலையில், தலை
மறைவான தம்பிதுரை, லாரி டிரைவர் செந்தில்-குமார் ஆகியோரை
தேடுகின்றனர்.

Advertisement