தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது

2

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று நடக்க உள்ளது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஆக., 5ம் தேதி தொடங்குகிறது.

கூட்டத்தொடரில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்க இக்கூட்டம் நடத்தப் படுகிறது.

மேலும், தொகுதி மக்களின் கோரிக்கைகள், தீர்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்த விபரங்களை, உதயநிதி கேட்டு தெரிந்து கொள்ள உள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க., கொறடா வேலு வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக, உதயநிதி தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை 5:00 மணிக்கு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடக்கும்.

'அதில், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்' என கூறியுள்ளார்.

Advertisement