‘அரண் மகள்’ கட்டுப்பாட்டு அறை திறப்பு

திண்டுக்கல், ஜூலை 29

மாவட்டத்தில் இளம் வயது திருமணம், கர்ப்பம், பள்ளி இடைநிற்றல், உயர் வரிசை பிறப்பு ஆகியவற்றை குறைக்க மாவட்ட அளவில் கண்காணித்து குழுக்களிடம் அறிக்கை பெற்று தொடர் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் ‘அரண் மகள்’ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை கலெக்டர் துர்கா திறந்து வைத்தார். மகளிர் திட்ட இயக்குநர் கங்காதாரணி, மாவட்ட சுகாதார அலுவலர் செல்வக்குமார், சமூக பாதுகாப்புத் திட்ட மாவட்ட அலுவலர் ஹென்றிபீட்டர், முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் காலின்செல்வராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மாவட்ட, வட்டாரக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement