குப்பையால் பொலிவிழந்த ‘அக்மார்க்’ ஆய்வக கட்டடம்

திருப்பூர்: திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடா வளாகத்தில் உள்ள, ‘அக்மார்க்’ ஆய்வக கட்டடத்தை பராமரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



வேளாண் வணிகத்துறையின் ‘அக்மார்க்’ ஆய்வகம், திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள், அக்மார்க் சான்று பெற ஆய்வகம் வந்து செல்கின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், ‘அக்மார்க்’ ஆய்வகம் அருகே கொட்டி வைக்கப்படுகின்றன.

குப்பை அதிகம் சேர்ந்த பின், அங்கிருந்து வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப்படுகிறது. குப்பை அதிக அளவு இருப்பதால், அக்மார்க் ஆய்வகத்தை சுற்றி பராமரிப்பு இல்லாத சூழல் தொடர்கிறது. கட்டடத்தை சுற்றிலும் புதர் மண்டியும், கட்டடத்தின்மீதும் செடி, கொடிகள் படர்ந்தும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஆய்வ கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement