தேசிய யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை
திருப்பூர்: தமிழ்நாடு யூத் கேம்ஸ் பவுண்டேஷன் நடத்திய தேசிய அளவிலான யோகா, சிலம்பம், கராத்தே, செஸ் போட்டிகள், கொடைக்கானலில் நடைபெற்றது.
இதில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து, 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். யோகா கலையின், அனைத்து பிரிவுகளிலும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, யூத் கேம்ஸ் பவுண்டேஷன் திருப்பூர் மாவட்ட செயலாளர் கவியரசு, மாநில பொது செயலாளர் பாலாஜி ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.
போட்டியில் பங்கேற்று, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு பெற்ற மாணவ, மாணவியர், வரும் அக்., மாதம் நேபாள நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்
-
சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஆஜர்!
-
'மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி
-
இணையவழி மோசடி புகார்களில் காப்பாற்றப்பட்டது ரூ.11,158 கோடி
-
24 மணிநேரம் 24 நிமிடங்கள் பறந்த ஏர்பஸ் விமானம்; வானில் அதிக நேரம் பறந்து சாதனை
-
வருமானம் ஈட்டும் கணவன் - மனைவி குடும்ப செலவை சமமாக பங்கிட வேண்டும்; விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி