அமைச்சர் கீர்த்தனாவுடன் மோதலா; 'அதெல்லாம் பொய்' என்கிறார் ஜெகதீஸ்வரி
விருதுநகர்: ''நாங்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக செயல்படுகிறோம்,'' என விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனாவின் கையை உயர்த்திப்பிடித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில் தெரிவித்தார்.
அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசு விழாவில், தன் பெயருக்கு முன்னதாக, கீர்த்தனா பெயரை போட்டது குறித்து ஜெகதீஸ்வரி, மாவட்ட கலெக்டரிடம் கேள்வி எழுப்பிய வீடியோ வைரல் ஆனது. இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக, சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் கீர்த்தனாவின் கையை உயர்த்திப்பிடித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது: சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். நான் உண்மையில் கீர்த்தனாவை என் உடன் பிறந்த சகோதரியாக நினைக்கிறேன்.
அவர் என்னை அக்காவாக நினைத்து தான் நாங்கள் இந்நாள் வரை பயணிக்கிறோம்.
அதற்கு சாட்சி தான் எங்களது ஒற்றுமை. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. சகோதரி கொஞ்ச நாட்களாக விருதுநகரில் பல சேவைகளை செய்தார்கள்
சமூக வலைதளங்களில் வருவதெல்லாம் பொய்.
சீண்டியவர்கள் சீண்டட்டும்; போற்றுபவர்கள் போற்றட்டும். நாங்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக செயல்படுகிறோம். இவர் என்னுடைய தங்கை. நாங்கள் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒற்றுமையுடன் தான் செயல்படுவோம். இது உறுதி. இவ்வாறு அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசினார்.
விருதுநகர்லே இருந்து ராஜபாளையம் போறதுக்கு மினிஸ்டர் கிட்டே மினிஸ்டரே அனுமதி கேக்கோணுமா? அப்பா, படு ஸ்ட்ரிக்ட்டு தான். வோட்டு போட்ட பாவத்துக்கு மக்கள் 5 வருசம் பொறுத்துக் கொள்ளணும் , வேற வழியில்லை. தூய ஆட்சி வழங்கும் ஜோசப் விஜய் பொறுப்பாரா?
விக்கப்பா இரண்டாவது முறை ஜெயித்து இருந்தால் தமிழகமே வருத்தப்பட்டு இருக்கும்.
Appadiyaaaaa
அட யாரு சொன்னா? நாங்க ரெண்டு பேரும் சத்தியமா பாசமலர் சிஸ்டர்ஸ். எங்கள நம்புங்க. இத நீங்க நம்புனாதான் விஜயண்ணாவும் எங்கள நம்புவாரு. ரெண்டு பேரையும் அமைச்சர் பதவில இருந்து தூக்க மாட்டாரு. என்ன நீங்க எங்கள நம்பிட்டீங்கல்ல?
இது தேவை இல்லாத செய்தி. உங்கள் செய்தித்தாள் உயர்ந்த தரத்தில் உள்ளது. அதைக் குறைக்காதீர்கள்.
போஸ் குடுக்கறதை பார்த்தா WWF fightக்கு ரெடியாயிட்ட மாதிரி தெரியுதே.
there is an another article in today paper which exibit the reality
please mentionமேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'