தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
சென்னை: 'மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நலன் காக்கப்படும்' என, தமிழக பா.ஜ., மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அன்புமணி எம்.பி., பார்லிமென்டில் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
அதில், '2018 பிப்.,16ம் தேதியிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில், கர்நாடகா பிற கீழ்நிலை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என, எங்கும் குறிப்பிடவில்லை' என, சட்டப்பூர்வமாக கூறியுள்ளார்.
இது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அளிக்கப்பட்ட சட்டப்பூர்வ விளக்கம் மட்டுமே. திட்டத்தை ஒருதலைபட்சமாக செயல்படுத்த முடியும் என அர்த்தம் அல்ல.
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, காவிரி படுகையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், இன்னும் இந்த தீர்ப்பை செயல்படுத்தும் அதிகார அமைப் பாகவே உள்ளது.
கர்நாடகா, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தாலும், அதை மத்திய நீர் வள ஆணையம், தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தும்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்து கட்டாயம் கேட்கப்பட வேண்டும் என்பது விதி. காவிரி மேலாண்மை ஆணையமானது, அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட அமைப்பு.
எனவே, பல மாநிலங்களுக்கு எதிராக, தீர்ப்பாய தீர்ப்பின் படி, கீழ்நிலை மாநிலங்களின் நீர் பங்கையோ, நீரை வெளியேற்றும் கால அட்டவணையையோ பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்காது.
காவிரி தீர்ப்பை நியாயமாக அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தீர்ப்பை மீறும் அல்லது எந்த மாநிலத்தின் நலனையும் பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்காது என, அனைத்து காவிரி படுகை மக்களுக்கு, பா.ஜ., உறுதியளிக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணைய கொள்கை அமைப்பின்படி மட்டுமே செயல்படும். தமிழகத்தின் நலனை என்றும் பா.ஜ., காக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்
-
சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஆஜர்!
-
'மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி
-
இணையவழி மோசடி புகார்களில் காப்பாற்றப்பட்டது ரூ.11,158 கோடி
-
24 மணிநேரம் 24 நிமிடங்கள் பறந்த ஏர்பஸ் விமானம்; வானில் அதிக நேரம் பறந்து சாதனை
-
வருமானம் ஈட்டும் கணவன் - மனைவி குடும்ப செலவை சமமாக பங்கிட வேண்டும்; விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி