1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
புதுச்சேரி: நகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்ற 15 வகையான பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் நகராட்சி இணைந்து ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் விமல்ராஜ், தொழில்நுட்ப ஆலோசகர் சீனுவாசன் அடங்கிய குழுவினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 12 கடைகளில் விற்ற 1 டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைகளுக்கு 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பகுதி பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'