செவிலியர்களுக்கு புதிய சீருடை: செவிலியர் சங்கம் வரவேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது, எங்கள் சங்கத்தின் நீண்டகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என, புதுச்சேரி அரசு செவிலியர் அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சீருடை நடைமுறையில் இருந்தது. அரசு செவிலியர்களுக்கென தனித்துவமான, கண்ணியமான மற்றும் நவீன தொழில்முறை அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சீருடையை மாற்ற வலியுறுத்தி வந்தோம். அதையடுத்து அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவித்து அரசாணை வெளியாகியுள்ளது.
இதற்காக நடவடிக்கை எடுத்த கவர்னர், முதல்வர், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர் சங்கங்களுக்கு புதுச்சேரி அரசு செவிலியர், அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'
Advertisement
Advertisement