பைக் மோதி பெண் பலி
கடலுார்: சாலையில் நடந்து சென்ற பெண், பைக் மோதி இறந்தார். கடலுார், முதுநகர் சுத்துகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி பழனியம்மாள், 50; இவர், சிதம்பரம்–கடலுார் சாலையில் முதுநகர், சுத்துக்குளம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த பைக், பழனியம்மாள் மீது மோதி நிற்காமல் சென்றது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த பழனியம்மாள் கடலுார் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கி்ன்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'
Advertisement
Advertisement