‘இன்டீரியர் டிசைன்’ செய்வதாக ரூ.10 லட்சம் ஏமாற்றியவர் கைது

நீலாங்கரை: வீட்டிற்கு ‘இன்டீரியர் டிசைன்’ எனும் உள் அலங்காரம் செய்து தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

இ.சி.ஆர்., பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் அஞ்சு சுரேஷ்குமார், 45. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், வீட்டில் ‘இன்டீரியர் டிசைன்’ செய்ய, இணையதளம் வாயிலாக, ‘ஹக்கி டிசைன்’ என்ற தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

அந்நிறுவனத்தைச் சேர்ந்த பாசில், 37, என்ற பெண், ‘10 லட்சம் ரூபாய் வரை செலவாகும்’ எனக் கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய அஞ்சு, 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், மூன்று ஆண்டுகளாக பணி செய்யாமல் அப்பெண் ஏமாற்றி வந்துள்ளார்.

பணத்தை திருப்பி கேட்டபோது, பாசில் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரை அடுத்து விசாரித்த நீலாங்கரை போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட பாசிலை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement