வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

வில்லியனுார்: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சுகாதார நிலைய தலைமை டாக்டர் பாமகள் கவிதை தலைமை தாங்கினார். டாக்டர்கள் சவுந்தரபாண்டியன் மற்றும் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மலேரியா தொழில்நுட்ப உதவியாளர் சேதுபதி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மலேரியா உதவி இயக்குனர் டாக்டர் முருகன் பங்கேற்று பேசியதாவது: டெங்கு நோய் குறித்தும், டெங்கு நோயை பரப்பும் ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தி மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக பேசினார். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சரவணன், டெங்கு நோய் உண்டாக்கும் ஏ.டி.எஸ்., கொசு போல் வேடம் அணிந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். ஊர்வலம் ராக் செவிலியர் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஞானசவுந்தர்யா, சசிகலா ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கிய பேரணி வில்லியனுார் நான்கு மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் சுகாதார நிலையத்திற்கு வந்தனர். சுகாதார ஆய்வாளர் இளையதாசன் நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார நிலைய உதவி ஆய்வாளர்கள் அய்யனார், ரவிச்சந்திரன், விமல் கலையரசி, ஆஷா பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.

Advertisement